search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் பலி"

    • பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.

    காஜியாபாத்:

    கிழக்கு டெல்லி காஜிப்பூரில் புத் பஜார் என்ற மார்க்கெட் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். நேற்று இரவு 9.30 மணியளவில் பொதுமக்கள் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு கார் கூட்டத்தில் வேகமாக புகுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காஜியாபாத்தை சேர்ந்த சீதா தேவி என்ற 22 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் காரை சிறிது தூரம் விரட்டி பிடித்து டிரைவரை மடக்கி பிடித்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்க்கும் படி சுகன்யாவின் உறவினர்கள் மற்றும் அவரது கணவர் அஜித்திடம் கூறியுள்ளனர்.
    • திடீரென பெண்ணின் கணவர் அஜித் லாரியின் முன்பு பாய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    செங்குன்றம் பாடியநல்லூர் பாலகணேசன் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் அஜித். இவரது மனைவி சுகன்யா. இருவருக்கும் 27 வயது ஆகிறது.

    இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இந்த நிலையில் சுகன்யா கர்ப்பமானார். முதல் 5 மாதங்கள் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் பிரசவத்தின் போது பெண்ணின் கணவர் உடன் இருந்து பிரசவத்தை பார்த்து கொள்ளலாம் என விளம்பரம் செய்திருப்பதை பார்த்தனர்.

    இதையடுத்து அஜித் அவரது மனைவி சுகன்யாவை அந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். கடந்த 4 மாதமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 16-ந்தேதி சுகன்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே அன்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சில ஊசிகள் போடப்பட்ட நிலையில் திடீரென சுகன்யாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுகன்யா மயக்கம் அடைந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்க்கும் படி சுகன்யாவின் உறவினர்கள் மற்றும் அவரது கணவர் அஜித்திடம் கூறியுள்ளனர்.

    இதனால் அந்த ஆஸ்பத்திரி மருத்துவர்கள் பரிந்துரை செய்ததன் பேரில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்து சுயநினைவு இன்றி இருந்த சுகன்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். சுகன்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தையும் இங்குபேட்டர் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுகன்யாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சமரச பேச்சு நடத்தினர்.

    திடீரென பெண்ணின் கணவர் அஜித் அந்த வழியே வந்த லாரியின் முன்பு பாய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது மனைவி உயிரிழந்ததாகவும் எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஜித் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    • சுலோச்சனா (32). இவரும் இவரது தாயார் சின்னப்பொண்ணு என்பவரும் மருத்துவமனைக்கு செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற தனியார் டவுன் பஸ்சில் ஏற முயன்றனர்.
    • தனது தாயார் சின்னப்பொண்ணு பஸ்சில் ஏறாததை கண்ட சுலோச்சனா பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் சுலோச்சனா (32). இவரும் இவரது தாயார் சின்னப்பொண்ணு என்பவரும் மருத்துவமனைக்கு செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற தனியார் டவுன் பஸ்சில் ஏற முயன்றனர்.

    தவறி விழுந்தார்

    அப்போது தனது தாயார் சின்னப்பொண்ணு பஸ்சில் ஏறாததை கண்ட சுலோச்சனா பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுலோச்சனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விசாரணை

    இந்த விபத்து குறித்து சுலோச்சனாவின் சகோதரி வெண்ணிலா (34) கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் தாய் கண்ணெதிரே பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கனகவல்லி சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகுமார் என்பவரது மனைவி கனகவல்லி (வயது 38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இ ல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.

    மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை, வியாசர்பாடி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகள் ரோகிணி (வயது25). மதுரவாயலில் உள்ள பிரபல எண்ணெய் நிறுவனத்தில் ஏரியா வினியோகஸ்தராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் ஒரு கேனில் பெட்ரோல் வாங்கிவிட்டு அதனை ஒரு பையில் போட்டு மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் தொங்க விட்டு இருந்தார். அதே பையில் தனது செல்போனையும் வைத்து இருந்தார்.

    கோயம்பேடு காமராஜர் சாலை, லட்சுமி நகர் முதல் தெருவில் வந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்து பெட்ரோல் கேன் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்தது. இதில் ரோகினி உடல் கருகினார்.

    ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரோகிணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள செல்லமந்தாடி பகுதியில் வந்தபோது ரெயிலில் இருந்து ஒரு இளம்பெண் தவறி விழுந்தார்.
    • அவரது அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் ஆந்திராவைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது.

    திண்டுக்கல்:

    மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள செல்லமந்தாடி பகுதியில் வந்தபோது ரெயிலில் இருந்து ஒரு இளம்பெண் தவறி விழுந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் ஆந்திராவைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது.

    கைலாஷ் கன்வார் என்ற அந்த பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறந்த பெண்ணின் உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.
    • ஸ்கூட்டரில் இருந்து அவர் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார்.

    விழுப்–பு–ரம்:

    விழுப்–பு–ரம் மாவட்–டம் வானூர் தாலுகா நல்–லா–வூர் கிரா–மத்தைசேர்ந்–த–வர் லோக–நா–தன் (வயது 42). அவ–ரது மனைவி தேவி (38). இவர் கிளி–ய–னூ–ருக்கு சென்று வீட்–டுக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்–டி–ருந்–தார்.

    கிளி–ய–னூர் ஏரிக்–கரை சாலை–யில் வந்–தபோது எதிர்–பா–ராத வித–மாக ஸ்கூட்–டரில் இருந்து அவர் நிலைத–டு–மாறி தவறி கீழே விழுந்–தார். இதில் அவருக்கு மூச்–சுத்தி–ண–றல் ஏற்–பட்டு சம்–பவ இடத்–தி–லேயே பரி–தா–ப–மாக இறந்–தார்.

    இது–கு–றித்து தக–வல் அறிந்–த–தும் சம்–பவ இடத்–திற்கு விரைந்து சென்ற கிளியனூர் போலீ–சார் அவ–ரது உடலை கைப்–பற்றி பிரேத பரி–சோதனைக்–காக புதுச்–சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்து வக்கல்லூரி ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர்.

    • பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • செல்சியாவின் தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தாம்பரம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், புத்தர் தெருவை சேர்ந்தவர் யாழினி (வயது23).

    இவர் நெருங்கிய தோழியான காரைக்குடியை சேர்ந்த செல்சியா (23) என்பவருடன் ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை தோழிகள் இருவரும் தி.நகரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மின்சார ரெயிலில் செல்ல திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

    ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரெயில் தோழிகள் யாழினி, செல்சியா மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட னர்.

    இதில் பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தண்டவாளம் அருகே தோழிகள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வந்தபோது மின்சார ரெயில் வருவதை கவனிக்காமல் சென்றதால் அவர்கள் விபத்தில் சிக்கி இருப்பது தெரிந் தது.

    இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணவேணி அலறினார்.
    • சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு லட்சுமிகார்டன் சேரன் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 29). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. கடந்த 21-ந் தேதி ரமேஷ்குமார் வெளியில் சென்று இருந்தார். அப்போது கிருஷ்ணவேணி மாடியில் உள்ள அறைக்கு சென்றார்.

    அங்கு விளக்கு ஏற்ற முயன்றபோது அவர் அணிந்திருந்த நைட்டியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதை அவர் கவனிப்பதற்குள் நைட்டியில் மளமளவென தீ பரவியது.

    இதனால் தீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணவேணி அலறினார். மேலும், தீயை அணைத்து கொள்வதற்காக அவரா கவே குளியல் அறைக்குள் சென்று தண்ணீரை ஊற்றி க்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர்.

    தீயில் கருகிய கிருஷ்ணவேணி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணவேணிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமாரும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த சோழிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி அமுதா (வயது36). கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் சோழவரம் மார்க்கெட் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிள் மீது லாரி உரசியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா கணவர் கண்முன்பே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து கணவர் முருகன் கதறி துடித்தார். அவரும் மோட்டார் சைக்கிளோடு விழுந்ததில் காயம் அடைந்தார். அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார்.
    • ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னையில் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் ரெயிலில் இருந்து பயணிகள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பறக்கும் ரெயிலில் இளம்பெண் ஒருவர் செல்போன் பறிப்பின்போது தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. பட்டதாரி இளம்பெண்ணான இவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி பறக்கும் ரெயிலில் பயணம் செய்தார்.

    அடையாறு இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் வைத்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 பேர் பிரீத்தி செல்போனை பறித்தனர்.

    ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்று பிரீத்தி சுயநினை வை இழந்தார்.

    இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரீத்தி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். இதில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வினோத், அடையாறை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரும் பிரீத்தியின் செல்போனை பறித்து அவரது உயிரிழப்புக்கு காரணமானது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறி மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ரெயில் நிலையங்களில் இதுபோன்று நடைபெறும் செல்போன் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.
    • பாம்பு கடித்து இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சி, மேட்டு தெருவில் வசித்து வருபவர் வாசுதேவன் விவசாயி ஆவார். இவரது மகள் பார்கவி (வயது23) நர்சிங் கோர்ஸ் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். விடியற்காலை 2 மணி அளவில் பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதனால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.

    இந்தச் சம்பவம் குறித்து வாசுதேவன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×